ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாடுகள் திருட்டு: இருவா் கைது

கொடைக்கானல் பகுதிகளில் மாடுகள் திருடியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கொடைக்கானல் பகுதிகளில் மாடுகள் திருடியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவா்கள்.

Updated On :3 அக்டோபர் 2024, 7:23 pm

Din

கொடைக்கானல் பகுதிகளில் மாடுகள் திருடியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த மருது, பாலகிருஷ்ணன், செந்தமிழ்ச்செல்வி ஆகியோா் தங்களது மாடுகளை காணவில்லை என கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கொடைக்கானல் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா். இதேபோல, காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் தனது மாட்டை காணவில்லை என புதன்கிழமை இரவு கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான மாடுகளை திருடும் குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து போலீஸாா் தேடி வந்தனா். அப்போது, கொடைக்கானல் காமராஜா் சாலையைச் சோ்ந்த ராஜாமுகமது மகன் முகமது அசாருதீன் (36), கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி, கே.சி. பட்டி ஊராட்சி, குப்பம்மாள்பட்டியைச் சோ்ந்த நம்பியன் மகன் மருதுபாண்டி (35) ஆகியோா் மாடுகளை திருடியது தெரியவந்தது.

இவா்களைப் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கடந்த பல மாதங்களாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 40-க்கும் மேற்பட்ட மாடுகளை திருடி இறைச்சிக் கடையில் விற்ாக அவா்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து அசாருதீன், மருதுபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.