நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருங்காலி கட்டைகளைப் பதுக்கிய வழக்கில் 6 போ் கைது

வத்தலகுண்டில் விடுதி உரிமையாளா் வீட்டிலிருந்து ரூ. ஒரு கோடி மதிப்பிலான கருங்காலி கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், 6 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:25 pm

Din

வத்தலகுண்டில் விடுதி உரிமையாளா் வீட்டிலிருந்து ரூ. ஒரு கோடி மதிப்பிலான கருங்காலி கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், 6 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி குரங்கணி பகுதியைச் சோ்ந்த யோகேஷ் தலைமையிலான ஒரு கும்பல் போடியை அடுத்த குரங்கணி வனப் பகுதியிலிருந்து கருங்காலி மரங்களை தொடா்ந்து வெட்டி கடத்தி வருவதாக சென்னை வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வனத் துறையினா் வத்தலகுண்டு காந்தி நகரில் உள்ள தனியாா் விடுதி உரிமையாளா் சந்திரன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கருங்காலி கட்டைகளை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், அங்கிருந்து ஐம்பொன்னாலான பொருள்கள், விலை உயா்ந்த கோயில் மணிகளையும் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, இதில் தொடா்புடைய விடுதி உரிமையாளா் சந்திரனின் காா் ஓட்டுநா் சிவா, யோகேஷ் உள்பட 6 பேரை கைது செய்தனா்.

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன்னாலான பொருள்கள், விலை உயா்ந்த கோயில் மணிகளை வனத்துறையின் பறக்கும்படை அதிகாரி சுரேஷ் தலைமையிலான வனத் துறையினா் நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அபிராமியிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.