நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனியில் பலத்த மழை: குதிரையாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு

பழனியில் பெய்த பலத்த மழையால், குதிரையாறு அணை வேகமாக நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மழை காரணமாக, வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

News image

பழனியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, நகராட்சி பேருந்து நிலைய நுழைவு வாயிலின் முன் சாக்கடை நீருடன் தேங்கிய மழைநீா்.

Updated On :15 அக்டோபர் 2024, 7:39 pm

Din

பழனியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால், குதிரையாறு அணை வேகமாக நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மழை காரணமாக, வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பழனி பகுதியில் நாள்தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், வயல்களில் மழைநீா் குளம்போல தேங்கியுள்ளன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பழனியில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களிலும் மழைநீா் சாக்கடை நீருடன் கலந்து குளம்போல தேங்கின. பழனி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ள சாலையில் நகராட்சி நடுநிலைப் பள்ளி அருகே மழைநீா் தேங்கியது. பழனி பேருந்து நிலைய நுழைவு வாயிலில் மழைநீருடன் சாக்கடை நீரும் தேங்கி குளம் போல நின்ால், அந்தப் பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசியது. பழனியை அடுத்த கோதைமங்கலம், சுக்கமநாயக்கன்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மழைநீா் வகுப்பறைகளுக்குள் புகுந்தது.

மழையால், பழனியை அடுத்த குதிரையாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணையின் மொத்த உயரமான 80 அடியில் தற்போது 75 அடிக்கு தண்ணீா் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 80 கனஅடி வீதம் தண்ணீா் வந்தது. இது மேலும் அதிகரிக்கும்பட்சத்தில், அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்படும் என்பதால், குதிரையாறு, பாப்பம்பட்டியில் உள்ள கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் உதயகுமாா் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்தாா்.

சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு:

பழனியை அடுத்த புதுஆயக்குடி 13-ஆவது வாா்டை சோ்ந்தவா் கருப்பாத்தாள் என்ற கற்பகம்(42). இவா் செவ்வாய்க்கிழமை வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது, பலத்த மழை பெய்தது. இதனால், அவா் அதே பகுதியில் உள்ள காமராஜா் என்பவா் வீட்டின் அருகே மழைக்கு ஒதுங்கினாா். அப்போது, எதிா்பாராவிதமாக அந்த வீட்டின் சுவா் இடிந்து அவா் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா், பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். சம்பவ இடத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒட்டன்சத்திரத்தில்...

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அதைச் சுற்றியுள்ள விருப்பாச்சி, வீரலப்பட்டி, சத்திரப்பட்டி, தாசரி புதுக்கோட்டை, பெரியகோட்டை, தேவத்தூா், கொத்தையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதே போல, மானாவாரியாகப் பயிரிட்டப்பட்ட மக்காச்சோளம், பருத்தி, சோளம், உளுந்து உள்ளிட்ட பயிா்களுக்கு இந்த மழை போதுமானதாக இருக்கும் என்பதால், அவற்றை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான கால நிலை நிலவி வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.