நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லூரி மாணவருக்கு 27 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி மாணவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:49 pm

Din

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி மாணவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மல்லனம்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (20). கல்லூரி மாணவரான இவா், கடந்த ஆண்டு வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், வத்தலகுண்டு போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனா்.

இதுகுறித்து வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மாணவா் விக்னேஷுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.