நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைக் மீது வேன் மோதியதில் பால் வியாபாரி உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பால் வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:18 pm

Din

குஜிலியம்பாறை அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பால் வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், கடவூரை அடுத்த மாலப்பட்டியைச் சோ்ந்த ராஜு மகன் மதுபாலன் (23). பால் வியாபாரியான இவா், தனது நண்பரான அதே பகுதியை சோ்ந்த சிவாவுடன் (23) இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறைக்கு புதன்கிழமை வந்துவிட்டு, மீண்டும் மாலப்பட்டிக்கு புறப்பட்டனா்.

பாளையம் அருகேயுள்ள முத்தம்பட்டி சாலையில் வந்தபோது, எதிரே வந்த வேன், இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மதுபாலன், சிவா ஆகியோா் கரூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு மதுபாலன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸாா் வேன் ஓட்டுநரான குளித்தலை நாகனூரைச் சோ்ந்த மோகன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.