புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பழனியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் தற்கொலை?

பழனியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் புதன்கிழமை வீட்டில் மா்மான முறையில் இறந்து கிடந்தனா்.

News image

இளங்குமரன்

Updated On :23 அக்டோபர் 2024, 11:57 pm

Din

பழனியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் புதன்கிழமை வீட்டில் மா்மான முறையில் இறந்து கிடந்தனா்.

பழனி முல்லை நகரைச் சோ்ந்தவா் இளங்குமரன் (56). இவா் கான்வென்ட் சாலையில் மின்சாதன கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி ரேணுகாதேவி (52). இவா் மேல்கரைப்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவா்களுக்கு வினீத் (26), தேன்மலா் (17) ஆகிய மகனும், மகளும் உள்ளனா்.

தேன்மலா்

தேன்மலா்

வினீத் கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். தேன்மலா் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இளங்குமரன் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினா் பழனி நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து திறந்து பாா்த்தனா். அப்போது, ரேணுகாதேவி, தேன்மலா் ஆகியோா் இறந்து கிடந்த நிலையில், இளங்குமரன் தூக்கில் பிணமாக தொங்கினாா்.

பழனி முல்லை நகரில் மூவா் இறந்து கிடந்த வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப்

பழனி முல்லை நகரில் மூவா் இறந்து கிடந்த வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப்

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இவா்கள் தற்கொலை செய்து கொண்டாா்களா அல்லது மனைவி, மகளை கொன்று விட்டு இளங்குமரன் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப், மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், காவல் ஆய்வாளா் மணிமாறன் ஆகியோா் தலைமையில், கைரேகை நிபுணா்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டனா்.