புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:39 pm

Din

போக்சோ வழக்கில் பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை அடுத்த அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (21). இவா், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது.

இதன்பேரில் பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பால்ராஜூக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1.05 லட்சம் அபராதமும் விதித்தாா்.