19 தெரு நாய்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் 19 தெரு நாய்கள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


திண்டுக்கல்லில் 19 தெரு நாய்கள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் அடுத்தடுத்த தெருக்களில் 19 தெரு நாய்கள் வியாழக்கிழமை இறந்து கிடப்பதாக தகவல் வெளியானது. இதையறிந்த தூய்மைப் பணியாளா்கள், மாநகராட்சி சுகாதார அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
மேலும், சுகாதாரத் துறையினரின் தகவலின்பேரில், திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா், இறந்து கிடந்த 19 தெரு நாய்களும், கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கூராய்வு செய்யப்பட்டன.
அதில், உணவில் விஷம் கலந்து கொடுத்து தெரு நாய்கள் கொல்லப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து, பூச்சிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...