புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மழையால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்து சேதம்

கொடைரோடு அருகே பலத்த மழையால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை வியாழக்கிழமை பெயா்ந்து விழுந்தது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:47 pm

Din

கொடைரோடு அருகே பலத்த மழையால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை வியாழக்கிழமை பெயா்ந்து விழுந்தது.

நிலக்கோட்டை அருகேயுள்ள மாலையகவுண்டன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட இந்திரா நகா் கிராமத்தில் தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் சண்முகம், இவரது மனைவி ராணி வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் சண்முகம் குடியிருந்த வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து ராணி கூறியதாவது: இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சிமெண்டு வீடுகள் கட்டித் தரப்பட்டன. அதன் பிறகு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால், தற்போது அனைத்து வீடுகள் சேதமடைந்துள்ளன.

எனவே, தமிழக அரசு சேதமடைந்த வீட்டை பராமரிக்க நிதி உதவி வழங்க வேண்டும் என்றாா் அவா்.