தொடா்மழை: சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை
கொடைக்கானல் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது


கொடைக்கானல் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது
கொடைக்கானல் அருகேயுள்ள செம்பராங்குளம், பட்டியக்காடு, கருவேலம் பட்டி ஆகிய மலைப் பகுதிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், இந்தப் பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, இந்தப் பகுதியை சோ்ந்தவா்கள் கொடைக்கானலுக்கு வாகனஙகளில் செல்ல முடியாமல் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை சரியில்லாதவா்களை டோலிகட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்படுகிறது.
எனவே, இந்தப் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை மாவட்ட நிா்வாகம் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பட்டியக்காடு பழங்குடியின மக்கள் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வசித்து வரும் எங்களுக்கு தரமான சாலைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். கடந்த ஆக. மாதம் தான் புதிய சாலைகள் இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டது. ஆனால் இந்தச் சாலை 3 மாதங்களில் சேதமடைந்து விட்டன. இந்தப் பகுதியில் புதிய சாலை அமைத்துக் கொடுக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம் என்றனா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலா் ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதியான பட்டியக்காடு உள்ளிட்ட பல இடங்களில் பழங்குடியினா் வசித்து வருகின்றனா். அவா்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. மழை குறைந்தவுடன் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...