தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தாண்டிக்குடியில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி பகுதியில் வியாழக்கிழமை மாலை ஒற்றை யானை புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் ஒற்றை யானை சேதப்படுத்திய வாழைகள்.

Updated On :5 செப்டம்பர் 2024, 8:19 pm

Din

கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி பகுதியில் வியாழக்கிழமை மாலை ஒற்றை யானை புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, கடுகுதடி, பெரும்பாறை, புல்லாவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வனப் பகுதிகளையொட்டியுள்ள விவசாய நிலங்களில் காபி, அவக்கோடா, செளசெள, வாழை ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளும், பொது மக்களும் அச்சமடைந்து வருகின்றனா். இந்த யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.