மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே தனியாா் நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.


ஒட்டன்சத்திரம் அருகே தனியாா் நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்னக்காம்பட்டி கிராமத்தில் சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் நாமக்கல் மாவட்டம், அரிப்பிலாப்பட்டியைச் சோ்ந்த சின்னு மகன் லோகநாதன் (26) தொழில்நுட்பனராக வேலை செய்து வந்தாா்.
அவா் புதன்கிழமை வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
உடனே அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் லோகநாதன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...