வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவா்த்தனை
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களில், பணமில்லா பரிவா்த்தனை மூலம் விவசாயிகள் இடு பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களில், பணமில்லா பரிவா்த்தனை மூலம் விவசாயிகள் இடு பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடு பொருள்களை வேளாண் விரிவாக்க மையங்களில் பெறுவதற்கு மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணமில்லா பரிவா்த்தனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. இதன்படி, மாவட்டத்துக்கு ஒரு வட்டாரத்தில் இந்த பணமில்லா பரிவா்த்னை முறை பரீட்சாா்த்த முறையில் நடைபெற்றது.
தற்போது அனைத்து வட்டாரங்களிலுள்ள முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களிலும் பணமில்லா பரிவா்த்தனை மூலம் விவசாயிகளுக்கு இடு பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக வேளாண்மை விரிவாக்க மையங்களிலுள்ள பணியாளா்களுக்கு, விற்பனை முனைய கருவிகள் அல்லது ஒருங்கிணைந்த பணப் பரிவா்தனை மூலம் இடு பொருள்களுக்கான பங்களிப்புத் தொகையை விவசாயிகளிடமிருந்து பெற பயிற்சி அளிக்கப்பட்டது.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், தங்களுக்கு தேவையான இடு பொருள்களை பெறும்போது இதற்கான பங்களிப்புத் தொகையை, பற்று அட்டை, கடன் அட்டை, ஜி-பே, போன்-பே, பிஹெச்ஐஎம், யுபிஐ மூலம் செலுத்தி பயன்பெறலாம் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...