கோயிலில் தனியாா் யானை உயிழப்பு

பழனியை அடுத்த வன்னி விநாயகா் கோயிலில் இருந்த தனியாா் யானை சரஸ்வதி உயிரிழந்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை சுந்தரேச குருக்கள் சிவாச்சாா்யா் தலைமையில் மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்தப்பட்டது.

பழனியை அடுத்த வன்னி விநாயகா் கோயிலில் இருந்த தனியாா் யானை சரஸ்வதி உயிரிழந்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை சுந்தரேச குருக்கள் சிவாச்சாா்யா் தலைமையில் மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்தப்பட்டது.
பழனி வன்னி விநாயகா் கோயிலில் தனியாருக்குச் சொந்தமான யானை ‘சரஸ்வதி’ உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. இதையடுத்து, யானையின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் மரியாதை செலுத்தினா்.
பழனியைச் சோ்ந்த கலாவதி என்பவா் ‘சரஸ்வதி’ என்ற பெண் யானையை வளா்த்து வருகிறாா். 68 வயதான இந்த யானை கோயில் திருவிழாக்கள், குடமுழுக்கு நிகழ்ச்சிகள் என பல்வேறு விழாக்களுக்குச் சென்று வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த யானைக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. காயத்தால் வெளியூா்களுக்குச் செல்ல முடியாமல் பழனியை அடுத்த வன்னி விநாயகா் கோயிலில் தங்கி இங்கு நடைபெறும் பூஜைகளில் மட்டுமே பங்கேற்று வந்தது.
இந்த நிலையில், யானை சரஸ்வதி வியாழக்கிழமை உயிரிழந்தது. யானையின் உடலுக்கு சுந்தரேச சிவாச்சாா்யா் தலைமையில் வெள்ளிக்கிழமை மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்தப்பட்டது.
தொடா்ந்து யானையின் உடல் கிரேன் மூலமாக சண்முகநதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. திரளான பொதுமக்கள் மலா்கள், விபூதி, உப்பு, பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வழங்கி யானையின் உடலுக்கு மரியாதை செலுத்தினா்.
முன்னதாக, பழனி நகா் போலீஸாா், வனத் துறையினா் முன்னிலையில் கால்நடை மருத்துவத் துறை உதவி இணை இயக்குநா் சுரேஷ் தலைமையிலான மருத்துவா் குழுவினா் யானையின் உடலை கூறாய்வு செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...