செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ஒரு கப் டீ, ரெண்டு பிஸ்கெட்! உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?

ஒரு கப் டீ, ரெண்டு பிஸ்கெட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா என்பது பற்றி..

News image

தேநீர் தயாரிப்பு - ENS

Updated On :28 பிப்ரவரி 2026, 1:48 pm IST

காலையில் எழுந்ததும், தலைவலி என்றால், மாலை நேர இடைவேளை என எப்போதும் நமது முதல் தெரிவாக இருப்பது ஒரு கப் டீ, ரெண்டு பிஸ்கெட். ஆனால், இது பலரும் நினைப்பது போல உடலுக்கு நல்லதல்ல என்பதே பெரும்பாலான உடல்நல நிபுணர்களின் கருத்து.

பொதுவாகவே தேநீர் நேரம் என்பது பிஸ்கெட் இல்லாமல் நிறைவடைவதில்லை. பெயர்களும் வடிவங்களும் சுவைகளும் மாறலாம். ஆனால், அதில் இருக்கும் உட்பொருள்கள் மாறுவதில்லை. நிறமூட்டிகளும், சுவையூட்டிகளும், மணமூட்டிகளும் தான் மாறுகின்றன. அவையும் உடலுக்கு நல்லதல்ல என்பதே பெரும்பாலான கூற்று.

நாள்தோறும், நாட்டில் உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் என்பது அதிகரித்து வரும் நிலையில், முதலில் வீடுகளில் தடை செய்யப்பட வேண்டிய உணவாக இந்த பிஸ்கெட்டுகள் இடம்பெறுகின்றன.

பிஸ்கட் போன்ற குக்கீஸ் உணவு வகைகளில் டிரான்ஸ் கொழுப்பு அதிகம் உள்ளது. இது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. குறிப்பாக, இனிப்பு, சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகளைச் சாப்பிடுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

லேபிள்களில் கூறப்பட்டிருப்பதைக் காட்டிலும் பிஸ்கட்டுகளில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, அதிக சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட கொழுப்புதான் அதிகம் கலக்கப்படுகிறது.

இது குறித்து மத்திய அரசு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேநீர், பிஸ்கெட், சமோசா, ஜிலேபிபி போன்றவற்றில் கலந்திருக்கும் பொருள்கள் குறித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பதாகை ஒட்ட முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

இந்த உணவுகளுக்கெல்லாம் தடை விதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை இல்லை. அதற்கு மாறாக, மக்களே தங்களது உணவு முறைகளில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது.

பிஸ்கெட்டுகள் பார்க்க எண்ணெய் இல்லாமல் சுத்தமாக இருப்பதாக நினைக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. அதில் நார்ச்சத்து, சத்துக்கள் குறைவுதான். எனவே, இதனை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வது பரிந்துரைக்கத்தக்கது அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள்.

எப்போதாவது என்று இல்லாமல், தினமும் பிஸ்கட்டுகளை சாப்பிடும்போது உடல் எடை கூடுவது, அதிக கொழுப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்றவை ஏற்படுமாம். எனவே கவனம். ஒரு கப் டீ, ரெண்டு பிஸ்கட் நல்லதல்ல என்பதே பெரும்பாலான மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

Summary

About whether eating a cup of tea and two biscuits is good for the health..

இதையும் படிக்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.