மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்ரீராஜராஜ சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

பட்டிவீரன்பட்டி அருகே, அய்யம்பாளையம் ஸ்ரீ ராஜராஜ சோழீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 செப்டம்பர் 2024, 11:30 pm

Din

பட்டிவீரன்பட்டி அருகே, அய்யம்பாளையம் ஸ்ரீ ராஜராஜ சோழீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மருதாநதி கரையோரம் அமைந்துள்ள, பழைமை வாய்ந்த, ஸ்ரீராஜராஜ சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு, நன்னீராட்டு பெருவிழா முன்னிட்டு, சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, விசேஷ சந்தி யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு, புண்ணிய கலசங்கள் வலம், மூலஸ்தான மூா்த்திகள் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, கோபுர விமான கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றது. விழாவில், அய்யம்பாளையம், இதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் செய்தனா்.