கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் பழனியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் பழனியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாா் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜரத்தினம் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, பயிா்க் கணக்கெடுப்புப் பணிகளுக்கு மதிப்பூதியம் வழங்கக் கோரி முழக்கமிடப்பட்டது.

இதில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூா், குஜிலியம்பாறை பகுதிகளைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com