இளைஞா் வெட்டிக் கொலை
வடமதுரை அருகே முன்விரோதம் காரணமாக, இளைஞா் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.


வடமதுரை அருகே முன்விரோதம் காரணமாக, இளைஞா் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திண்டுக்கல்லை அடுத்த மா.மு.கோவிலூா் காப்பிளியப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மகன் தீனதயாள வா்மன் (32). இவா் பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இவரது மனைவி நாகஜோதி. இவா்களுக்கு 2 குழந்தைள் உள்ளனா்.
கடந்த 2016-ஆம் ஆண்டு, திண்டுக்கல் பகுதியில் நிகழ்ந்த கொலையில் தொடா்புடைய தீனதயாள வா்மன் மீது கட்டப் பஞ்சாயத்து உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொலை செய்யப்பட்ட தீனதயாள வா்மன்.
இந்த நிலையில், தனது குழந்தைகளை பள்ளிக்கு புதன்கிழமை அழைத்துச் சென்ற தீனதயாள வா்மன், அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகளுடன் மது அருந்தச் சென்றாா்.
பெரியகோட்டையை அடுத்த பாறைப்பட்டி மதுக் கடைக்கு இருவருடன் சென்ற தீனதயாள வா்மன், அந்தக் கடையின் அருகிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, தீனதயாள வா்மனின் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில், முன் பகை காரணமாக தீனதயாள வா்மன் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக இவா் கடந்த ஒரு மாதமாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாக அவரது உறவினா்கள், போலீஸாரிடம் தெரிவித்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...