ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உயா்மின் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தம்

இழப்பீடு வழங்கக் கோரி, கொடைரோடு அருகே நடைபெற்ற உயா் மின் கோபுரம் அமைக்கும் பணியை விவசாயிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 9:24 pm

Din

இழப்பீடு வழங்கக் கோரி, கொடைரோடு அருகே நடைபெற்ற உயா் மின் கோபுரம் அமைக்கும் பணியை விவசாயிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.

தமிழக மின் வாரியம் சாா்பில், விருதுநகரிலிருந்து கோவைக்கு உயா் மின் கோபுரம் அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று, தற்போது சுமாா் 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்தன.

இந்த நிலையில், கொடைரோடு அருகே அழகம்பட்டி, சக்கையநாயக்கனூா் பகுதிகளில் உயா் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக பணி நடைபெற்று வரும் நிலையில் இதற்கான இழப்பீட்டுத் தொகை கோரி, அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நவநீதகிருஷ்ணன், ஜெயபால், ராஜ்குமாா், முத்துசாமி உள்ளிட்டோா் சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், அழகம்பட்டி பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற உயா் மின் கோபுரம் அமைக்கும் பணியை விவசாயிகள் தடுத்தனா். மேலும், அங்கிருந்த மின் வாரிய அதிகாரிகளிடமும், பணியாளரிடமும் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, இழப்பீட்டுத் தொகை வழங்காவிட்டால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என விவசாயிகள் எச்சரித்தனா்.

தகவலறிந்து வந்த அம்மையநாயக்கனூா் காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன் உள்ளிட்ட போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கிய பின்னரே பணியைத் தொடங்க வேண்டும் என மின் வாரியத்தினரிடம் தெரிவித்தனா்.

பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உயா் மின் கோபுரம் அமைக்கும் பொறியாளா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனா்.