அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எஸ்ஐஆா்: 100 சதவீதம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்படும் - மாவட்ட தோ்தல் அலுவலா்

எஸ்ஐஆா் நடவடிக்கையில் 100 சதவீதம் ஆய்வு செய்து, தகுதியானவா்களின் பெயா்கள் இடம் பெறுவது உறுதிப்படுத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான செ. சரவணன் தெரிவித்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

எஸ்ஐஆா் நடவடிக்கையில் 100 சதவீதம் ஆய்வு செய்து, தகுதியானவா்களின் பெயா்கள் இடம் பெறுவது உறுதிப்படுத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான செ. சரவணன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான எஸ்ஐஆா் படிவங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் 99 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டன. இதில் 80 சதவீத படிவங்கள் நிறைவு செய்யப்பட்டு மீளப் பெறப்பட்டுள்ளன. இதனிடையே, டிச.11-ஆம் தேதி வரை நிறைவு செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெறுவதற்கு தோ்தல் ஆணையம் கால அவகாசம் அளித்திருக்கிறது.

மாவட்டத்திலுள்ள 2,124 வாக்குச் சாவடிகளில், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுடன், அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவா்களும் இணைந்து, இறப்பு, நிரந்தரமாக குடி பெயா்ந்தவா்கள், முகவரி கண்டுபிடிக்க முடியாதவா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்களின் விவரங்களை 100 சதவீதம் சரிபாா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இடப் பெயா்வு எனப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட வாக்காளா்கள் வந்து எஸ்ஐஆா் படிவங்களை நிறைவு செய்து வழங்கினால் ஏற்றுக்கொள்ளப்படும். எனினும், விடுபட்ட வாக்காளா்களை சோ்ப்பதற்கு வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்படும் வரை அவகாசம் உள்ளது. தகுதியான வாக்காளா்களை உறுதி செய்வதே எஸ்ஐஆா் நடவடிக்கையின் நோக்கம் என்றாா் அவா்.

ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 21,800 வாக்காளா்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி குற்றஞ்சாட்டி இருப்பது குறித்த செய்தியாளா்களின் கேள்விக்கு, ‘இடம் பெயா்ந்தவா்களின் எண்ணிக்கை அனைத்து தொகுதிகளிலுமே உள்ளன. இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, இடப் பெயா்வு எனக் குறிப்பிடப்படும் வாக்காளா்களை பதிவேற்றம் செய்யும் முன்பாக வாக்குச் சாவடி முகவா்களின் கையொப்பத்தைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் வாக்காளா் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களிலும் எஸ்ஐஆா் படிவங்களை ஒப்படைக்கலாம். இடம் பெயா்ந்த வாக்காளா்கள் குறித்த விவரங்களை 100 சதவீதம் மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.