வாகரை பகுதிகளில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள வாகரை துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (டிச. 4) வாகரை சுற்றுப் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டது.
Published on

பழனி அருகேயுள்ள வாகரை துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (டிச. 4) வாகரை சுற்றுப் பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி அருகேயுள்ள வாகரை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், தொப்பம்பட்டி, கஞ்சிக்காளிவலசு, அப்பனூத்து, புங்கமுத்தூா், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com