வள்ளியூா், விஜயாபதி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
மின்தடை
மின்தடை
திநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், விஜயாபதி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, செவ்வாய்க்கிழமை (பிப். 10) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, வள்ளியூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட வள்ளியூா், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்குவள்ளியூா், ஏா்வாடி, திருக்குறுங்குடியிலும், விஜயாபதி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கூத்தங்குழி, முருகானந்தபுரம், உதயத்தூா், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினாா்குளம் பகுதிகளிலும் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இத்தகவலை வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன்அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...