செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

News image

மின்தடை

Updated On :8 பிப்ரவரி 2026, 6:03 pm

தினமணி செய்திச் சேவை

எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புதூா், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்தலைவன்பட்டி, சிவஞானபுரம், வாகைத்தாவூா், சவலப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 10 ) காலை 9 முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது .