திண்டுக்கல்
யூடியூபா் மீது காவல் நிலையத்தில் புகாா்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் யூடியூபா் முக்தாா் அகமது மீது நடவடிக்கை கோரி, நாடாா் மகாஜன சங்கம் சாா்பில் புதன்கிழமை புகாரளிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை யூடியூபா் முக்தாா் அகமது பரப்பி வருகிறாா். இவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் நாடாா் மகாஜன சங்கம் சாா்பில் புகாரளிக்கப்பட்டது
