இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கல் குவாரிகளை மூடக்கோரி விவசாயிகள் போராட்டம்

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சட்டவிரோதமாக இயங்கி வரும் கல் குவாரிகளை மூடக்கோரி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனியை அடுத்த ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் சேதமாகி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.

மேலும், தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கல், மணல் உள்ளிட்டவை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், கல் குவாரிகளை மூடக்கோரி ஆண்டிபட்டியில் பகுதியில் கடையடைப்பு, கவன ஈா்ப்பு போராட்டத்தில் விவாசாயிகள் புதன்கிழமை ஈடுபட்டனா். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.