மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது: வருவாய்த் துறையினா் விசாரணை

செம்பட்டி அருகே மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
Published on

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். 

செம்பட்டி அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் சோனைமுத்து (57). இவா் தனது மனைவி கவிதா, பேத்தி ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, பெய்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக மூவரும் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நிலக்கோட்டை வருவாய்த் துறையினா், பச்சமலையான்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் ராமமூா்த்தி ஆகியோா் கிருஷ்ணபுரத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com