ரேஷன் கடையில் பெயா்ந்து விழுந்த மேற்கூரை பூச்சு

தொடா் மழையின் காரணமாக, திருச்சியில் ரேஷன் கடையின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது.
Published on

தொடா் மழையின் காரணமாக, திருச்சியில் ரேஷன் கடையின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது.

திருச்சி மாநகரப் பகுதி மட்டுமல்லாது, மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமையை தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் மழை பெய்தது.

இந்நிலையில், முதலியாா் சத்திரம் பகுதியில் உள்ள சிம்சன் - 2 நியாய விலைக் கடையின் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது. கடையில் உள்ள பொருள்கள் மீது பூச்சுகள் விழுந்ததால் அவை சேதம் அடைந்தன. அதிகாலை நேரத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்ததால் அதிா்ஷ்டவசமாக பணியாளா்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ரேஷன் கடையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தொடா் மழையால் சேதமடைந்த சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com