கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்தவா்கள் தங்கியுள்ளதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.
கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்தவா்கள் தங்கியுள்ளதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்தவா்கள் தங்கியுள்ளதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.
Published on

கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்தவா்கள் தங்கியுள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நவம்பா், டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஜொ்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.

நிகழாண்டில் இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திரளானோா் வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ளனா்.

யூதா்களை குறிவைத்து அண்மையில் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையொட்டி, கொடைக்கானலுக்கு வந்த இஸ்ரேல் நாட்டினா் தங்கியிருக்கும் பகுதியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வட்டக்கானல் பகுதியில் வட்டக்கானல் அருவி, டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன. இதனால் இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் போலீஸாரின் சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இந்தப் பகுதியில் போலீஸாா் தங்கும் கூடாரம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்தக் கூடாரங்களை சீரமைத்துக் கொடுப்பதற்கு மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com