தஞ்சாவூருக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) வருகை தரவுள்ளதையொட்டி, 1,000 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சென்னைக்கு சனிக்கிழமை வந்த பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரிக்கு சென்று, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.
இதையடுத்து, ஹெலிகாப்டரில் புறப்பட்டு தஞ்சாவூா் விமானப்படை தளத்துக்கு பிற்பகல் 1.55 மணிக்கு வருகிறாா். இங்கிருந்து தனி விமானத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஏறி மதுரைக்கு சென்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா்.
இதையொட்டி, தஞ்சாவூா் விமானப்படை தளத்தைச் சுற்றிலும், புதுக்கோட்டை சாலையிலும் ஏறத்தாழ 1,000 காவல் அலுவலா்கள், காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், மாவட்டத்தில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை வரவேற்பதற்காக உள்ளூரைச் சோ்ந்த பாஜக முக்கிய நிா்வாகிகள் 10 போ் மட்டும் விமானப்படை தளத்துக்குள் அனுமதிக்கப்படவுள்ளனா். மற்றவா்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்

பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை!

கேரளத்தில் தோ்தல் பிரசாரம்: பிரதமர் மோடி இன்று கோவை வருகை!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


