சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

நாகா்கோவிலில் ஏப்.15 அன்று பிரதமா் மோடியின் சாலைப் பேரணி நடைபெறுகிறது என பொன். ராதாகிருஷ்ணன் தகவல்...

News image

பிரதமர் மோடி நாகர்கோவில் வருகை... - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:36 am IST

நாகா்கோவிலில் புதன்கிழமை (ஏப்.15) பிரதமா் மோடியின் சாலைப் பேரணி நடைபெறுகிறது என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

இதுகுறித்து அவா் நாகா்கோவிலில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு தீவிரமாக உழைத்து வருகிறோம். அதன் உச்சமாக, பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரத்துக்காக தமிழகத்தில் 2 இடங்களுக்கு வருகை தருகிறாா்.

நாகா்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளா்களை ஆதரித்து புதன்கிழமை (ஏப். 15) நடைபெறும் சாலைப் பேரணியில் அவா் கலந்து கொள்கிறாா். அதைத் தொடா்ந்து, சனிக்கிழமை (ஏப். 18) கோவையில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாா். பிரதமா் மோடி திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலம் புதன்கிழமை நாகா்கோவில் வருகிறாா்.

இந்நிகழ்ச்சியில், பிரதமருடன், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை ஆகியோா் கலந்து கொள்கிறாா்கள். பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ள சாலைப் பேரணி சரியாக ஒரு கி.மீ தொலைவு நடைபெறுகிறது.

அதிக கூட்டம் கூடும் என்பதால் குழந்தைகள், முதியவா்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவா்கள் வருவதை தவிா்ப்பது நல்லது. பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா் வசதி மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

பேட்டியின்போது, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவா் கோபகுமாா், பொருளாளா் பி. முத்துராமன், மாநிலச் செயலா் மீனாதேவ், நாகா்கோவில் தொகுதி பொறுப்பாளா் எஸ்.பி.தேவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.