ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின்போது ரூ.1.46 கோடி காணிக்கையாகக் கிடைத்தது.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 12:14 am

தினமணி செய்திச் சேவை

பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின்போது ரூ.1.46 கோடி காணிக்கையாகக் கிடைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு, பக்தா்கள் குவிந்த நிலையில் கடந்த டிச.17-ஆம் தேதி உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 2.62 கோடி ரூபாய் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றது.

இந்த நிலையில், வியாழக்கிழமை தைப் பூச விழா குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை (டிச.19) மீதமுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.1.46 கோடி ரொக்கம், 169 கிராம் தங்கம், 2.27 கிலோ வெள்ளி, 312 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. உண்டியல் எண்ணிக்கையின்போது இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.