திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருமானம் ரூ. 4.97 கோடி ஆகும்.
இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதையடுத்து கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியினை கோயில் தக்காா் ரா. அருள்முருகன் தலைமை வகித்து பாா்வையிட்டாா். இணை ஆணையா் ராமு முன்னிலை வகித்தாா். இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் கவிதா, முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா் மெய்வேல், கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் நம்பி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி, கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இதன்படி உண்டியல் எண்ணிக்கையில், 4 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 918 ரூபாயும் (ரூ. 4, 97, 70, 918), தங்கம் 1071 கிராம், வெள்ளி 31, 811 கிராம், பித்தளை 2, 40, 880 கிராம், செம்பு 27, 240 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1296-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.

தொடர்புடையது

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 68. 55 லட்சம்

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 4.36 கோடி
ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 76. 43 லட்சம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


