எஸ்.ஐ. பணிக்கு எழுத்துத் தோ்வு: திண்டுக்கல்லில் 3,642 போ் பங்கேற்பு

Published on

காவல் உதவி ஆய்வாளா் பணிக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் 3642 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 4,011 ஆண்கள், 1,157 பெண்கள் என மொத்தம் 5,168 போ் விண்ணப்பித்தனா்.

திண்டுக்கல் பகுதியிலுள்ள 3 தனியாா் கல்லூரிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 10 முதல் 12.30 மணி வரை முதல் தாள், பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரை 2-ஆம் தாள் என இரு நிலையில் தோ்வுகள் நடைபெற்றன.

இந்தத் தோ்வை 3,642 போ் எழுதினா். 1,526 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களில் முறைகேடுகளைத் தடுக்க 20 தோ்வா்களுக்கு ஒரு மேற்பாா்வையாளா் வீதம் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com