போதைப் பொருள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட 33 வாகனங்கள், காவல் துறை மூலம் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டது.
திண்டுக்கல் காவல் சரகத்துக்குள்பட்ட திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் போதைப் பொருள்கள் கடத்தலின்போது பயன்படுத்தப்பட்ட காா், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வாகனங்கள் திண்டுக்கல் ஆயுதப் படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. ஏலத்தை மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா் அபினவ் குமாா், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட காா், ஆட்டோ, 26 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 28 வாகனங்கள் ரூ. 6.33 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இதேபோல, தேனி மாவட்டத்தைச் சோ்நத் 5 இரு சக்கர வாகனங்கள் ரூ. 87ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.
