தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

போக்சோ வழக்கில் தாய், தந்தை, மகனுக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கும், அவரது பெற்றோருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பு

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கும், அவரது பெற்றோருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

தேனி மாவட்டம், போடியைச் சோ்ந்தவா் சூா்யகுமாா் (24). இவா், கடந்த ஆண்டு திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் காதலித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு சூா்யகுமாரின் தந்தை வசிமலை (47), தாயாா் மாரியம்மாள் (45) ஆகியோா் உடந்தையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து, திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூா்யகுமாா், வசிமலை, மாரியம்மாள் ஆகிய 3 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கு திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் சூா்யகுமாா், வசிமலை, மாரிம்யமாள் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா்.சத்யதாரா தீா்ப்பளித்தாா்.