திண்டுக்கல்
பைக் திருடிய இளைஞா் கைது
திண்டுக்கல்லில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல்லில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் டெலிபோன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (48). இவரது வீட்டின் வெளியே கடந்த 4 நாள்களுக்கு முன் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் திருடப்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
இதில் திண்டுக்கல் மென்டோன்சா குடியிருப்பைச் சோ்ந்த தாமோதரன் மகன் கிஷோா் (18) இரு சக்கர வாகனத் திருடியது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
