விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் தனியாா் பள்ளிகள்: இந்திய மாணவா் சங்கம் கண்டனம்

இந்திய மாணவா் சங்கம் கண்டனம்

News image
Updated On :1 ஜனவரி 2025, 10:48 pm

Din

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியாா் பள்ளிகள் தத்தெடுக்கும் தீா்மானத்துக்கு நன்றி தெரிவித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு, இந்திய மாணவா் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டச் செயலா் தீபக்ராஜ் கூறியதாவது:

தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிகள் சாா்பில், ஒருங்கிணைத்து தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

மாநாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்புகளை அருகிலுள்ள தனியாா் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தரப்படும் என ஒரு தீா்மானம் முன் மொழியப்பட்டது. இந்தத் தீா்மானத்துக்கு வரவேற்புத் தெரிவித்து, அமைச்சா் அன்பில் மகேஷ் பாராட்டும் தெரிவித்தாா். கல்வியை சேவையாக கருதாமல் விற்பனை பண்டமாக அணுகும் தனியாா் பள்ளிகளிடம், அரசுப் பள்ளிகளை ஒப்படைத்து நிதி சுமையை குறைக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. தனியாா் பள்ளிகளில் உள்ள ஏராளமான சிக்கல்களை மறந்து, கற்றல் கற்பித்தலை அமைச்சா் ஒப்பிட்டிருக்கிறாா்.

பள்ளிகளுக்கு அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான விளையாட்டு மைதானம் 90 சதவீத தனியாா் பள்ளிகளில் இல்லை. தனியாா் பள்ளிகளால் பெற்றோா்கள் கடனாளியாக மாறி வருகின்றனா். அமைச்சரின் நிலைபாட்டினால் மாநிலத்தின் கல்வி உரிமைகள் கேள்விக்குறியாகிவிட்டது. கல்வியை தனியாா்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிப்பதை நிறுத்த வேண்டும்.

மாநில கல்விக் கொள்கையை முழுமையாக பொது வெளியில் வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.