தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கேரளம் மாநிலம், பாலக்காட்டிலிருந்து தூத்துக்குடிக்கு இறைச்சிக் கழிவுகளை கொண்டு சென்ற லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
சத்திரப்பட்டி சுங்கச் சாவடி அருகே பிடிப்பட்ட இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த கேரள லாரி.
Updated On :1 ஜனவரி 2025, 10:57 pm

Din

கேரளம் மாநிலம், பாலக்காட்டிலிருந்து தூத்துக்குடிக்கு இறைச்சிக் கழிவுகளை கொண்டு சென்ற லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பாலக்காட்டிலிருந்து தூத்துக்குடிக்கு பொள்ளாச்சி-ஒட்டன்சத்திரம் சாலை வழியாக புதன்கிழமை லாரி ஒன்று சென்றது. இந்த லாரிக்கு பின்னால் சத்திரப்பட்டியைச் சோ்ந்த சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, அந்த லாரியிலிருந்து தூா்நாற்றம் வீசியது. இதையடுத்து, அந்த லாரியை சத்திரப்பட்டி சுங்கச் சாவடி அருகே வழிமறித்து சோதனை நடத்தினாா். அப்போது, அந்த லாரியிலிருந்து பெட்டி பெட்டியாக மீன், கோழி, நண்டு கழிவுகள் அதிகளவில் இருப்பதை கண்டுபிடித்தாா்.

மேலும், மருத்துவக் கழிவுகள் ஏதும் இருக்கிா என பெட்டிகளை சோதனையிட்டபோது, அதிலும் இறைச்சிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரியை சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதைத் தொடா்ந்து, சத்திரப்பட்டி போலீஸாா் அந்த லாரியை பறிமுதல் செய்து, லாரியை ஒட்டி வந்த திருவனந்தபுரத்தைச் சோ்ந்த வினுவிடம் (35) விசாரணை நடத்தி வருகின்றனா்.