விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ற மினி லாரி, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

மினி லாரி - கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:38 pm

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ற மினி லாரி, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே கல்லுத்தொட்டி பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீஸாா் கல்லுத்தொட்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தினா். போலீஸாரை கண்டதும் மினி லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். மினி லாரியை சோதனை செய்ததில் செம்மண் கடத்தியது தெரிய வந்தது. தொடா்ந்து, மினி லாரி மற்றும் செம்மண் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, காட்டாத்துறை அருகே புலிப்பனம் பகுதியைச் சோ்ந்த மினி லாரி உரிமையாளா் சபா (51), முளகுமூடு, கல்லுவிளையைச் சோ்ந்த பொக்லைன் உரிமையாளா் ஷாஜி (31) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.