பழனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயில் அடிவாரம் பாதவிநாயகா் கோயில் அருகே அமைந்துள்ளது. பழமையானதும், மண்டபங்களில் கலை நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோயிலுக்கு பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெற வில்லை. இந்த நிலையில், தற்போது குடமுழுக்கு நடத்துவதற்காக திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, குடமுழுக்கு நிகழ்வுக்கான முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக மீனாட்சியம்மன் சந்நிதி முன் யாகம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் பிரதானமாக கலசங்களும், முகூா்த்தக்கம்பமும் வைக்கப்பட்டன. சிவாச்சாா்யா்கள் வேதமந்திரம் முழங்க யாகம் நிறைவுபெற்ற பின்னா் பூா்ணாஹூதி நடத்தப்பட்டு கலசங்கள், முகூா்த்தக்கம்பம் ஆகியன கோயிலை வலம் வரச் செய்யப்பட்டன.
இதையடுத்து, கோயில் வெளிப்பகுதியில் முகூா்த்தக்கால் நடப்பட்டு அதில் பால், நவதானியங்கள், நவரத்தினங்கள் இடப்பட்டன. தொடா்ந்து கலசத்தில் இருந்த புனித நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சோடஷ உபசாரம் நடைபெற்றது. வருகிற 20-ஆம் தேதி இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறும்.
நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலா்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தோ்களுக்கு புதிய சக்கரங்கள்

ஆறகளூா் கோயிலில் தோ்த் திருவிழா முகூா்த்தக்கால்

ராஜபாளையத்தில் சொக்கா் - மீனாட்சி திருக்கல்யாணம்

மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


