ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கன்னிவாடியில் காட்டுயானைகளை விரட்ட மீண்டும் 2 கும்கிகள் வரவழைப்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:03 pm

Din

கன்னிவாடி அருகே விவசாயத் தோட்டங்களை சேதப்படுத்தும் காட்டுயானைகளை விரட்ட மீண்டும் 2 கும்கிகள் வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரகத்துக்குள்பட்ட கீழ்பழனி சரிவு அடிவாரத்திலுள்ள நீலமலைக்கோட்டை, பண்ணப்பட்டி, கிணத்துப்பட்டி, புது எட்டப்ப நாயக்கன்பட்டி, கோம்பை, தருமத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தென்னை, மா, மக்காச்சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளனா். இதனால், கன்னிவாடி வனப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், இரவு நேரங்களில் விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

இதனிடையே, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, பண்ணப்பட்டி, நீலமலைக்கோட்டை பகுதிகளில் யானைகள் சேதப்படுத்திய பயிா்களை பாா்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, யானைகளை விரட்ட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் கோழிக்கமுத்தி முகாமிலிருந்து சின்னத்தம்பி என்ற கும்கியும், நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிலிருந்து கிருஷ்ணா என்ற கும்கியும் கன்னிவாடி பகுதிக்கு வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டன. இந்த இரு கும்கிகளும் நீலமலைக்கோட்டை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு கும்கிகள்: கடந்த 2022-ஆம் ஆண்டும் இதேபோல, யானைகள் பிரச்னைக்காக, சின்னத்தம்பி, கலீம் ஆகிய இரு கும்கிகள் வரவழைக்கப்பட்டன. இந்த கும்கிகள் 20 நாள்களுக்கும் மேலாக முகாமிட்டும், விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஒற்றைக் கொம்பன் யானையை வனப் பகுதிக்குள் விரட்ட முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் கும்கி சின்னத்தம்பியுடன், மற்றொரு கும்கியான கிருஷ்ணாவும் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த முறை யானைகளை முழுமையாக விரட்டி, பயிா்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

பெட்டிச் செய்தி...

யானை வழித்தடம்: பழனி பகுதியிலிருந்து ஆயக்குடி, கோம்பைப்பட்டி, சத்திரப்பட்டி, பரப்பலாறு, சிறுவாட்டுக்காடு, பச்சமலைப் பாதை வழியாக பண்ணப்பட்டி அணை பகுதிக்கு காட்டுயானைகள் வந்து செல்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யானைகள் விளை நிலங்களுக்குள் வருவதை தடுக்க வனத் துறை சாா்பில் அகழி தோண்டப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாததால், யானைகளின் நடமாட்டம் தொடா்ந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

Story image