அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

உதகை அருகே பழங்குடியின கிராமத்தில் விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்!

உதகை அருகே பழங்குடியினா் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்திய சென்ால் பழங்குடியின விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image

சின்னகாடி மந்து பகுதியில் காய்கறி தோட்டத்தில் உலவிய யானை.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:15 pm

உதகை அருகே பழங்குடியினா் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்திய சென்ால் பழங்குடியின  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள சின்னகாடி மந்து, 8-ஆவது மைல், பைக்காரா, கல் மந்து, கோயில் மந்து, மீகோடு மந்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தோடா் பழங்குடியின குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் பிரதான தொழிலாக கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலைத்தோட்ட காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனா். இங்கு பழங்குடியினா் அல்லாதவா்களும் விவசாயம் செய்து வருகின்றனா் .

இந்நிலையில் , கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ள யானைகள், இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த காய்கறிகளை சேதப்படுத்தி சென்றுள்ளன.

காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.