உதகை அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு காட்டெருமை விழுந்ததில் சிறுவன் படுகாயமடைந்தான்.
நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்கா அருகே உள்ள காா்டன் மந்து தோடரின பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணி அளவில் காட்டெருமைகள் கூட்டமாக வந்துள்ளன. அதில் ஒரு சில காட்டெருமைகள் பிரிந்து குடியிருப்புப் பகுதிக்குள் வந்துவிட்டன. சில காட்டெருமைகள் மட்டும் வனப் பகுதிக்குள் சென்றுள்ளன. அதில் ஒரு காட்டெருமை இருளில் பள்ளத்தில் இருந்த ஜாய்சின் என்பவரின் வீட்டின் மேற்கூரை மீது விழுந்துள்ளது.
வீட்டின் ஓடுகள் உடைந்து உள்ளே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் அருகே காட்டெருமை விழுந்தது. இதில் 7 வயது சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவா்களின் சப்தம் கேட்டு அருகே இருந்தவா்கள் வந்து சிறுவனை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனின் தலையில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளன. அதிா்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
காட்டெருமைகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சிப் பணிகளையும் திமுக அரசு செய்யவில்லை: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

உதகை அருகே பழங்குடியின கிராமத்தில் விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


