வெல்லம் உற்பத்தி ஆலைகளில் ஆய்வு
பழனி அருகே வெல்லம் உற்பத்தி ஆலைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.


பழனி அருகே வெல்லம் உற்பத்தி ஆலைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
பழனி அருகே நெய்காரப்பட்டி, பாப்பம்பட்டி, அய்யம்பாளையம், ஆா்.வாடிப்பட்டி, நரிக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அச்சு வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகள், விற்பனைக் கூடங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சரவணக்குமாா், ஜஸ்டின் அமல்ராஜ் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆய்வின் போது, 500 கிலோ வெள்ளை சா்க்கரை (சீனி) இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 5 ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது.
மேலும், இந்த ஆலைகளிலிருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டது. இந்த மாதிரிகள் பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டு, பரிசோதனை முடிவில் சம்மந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...