தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் பலி

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 10:46 pm

Din

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பழனி பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் மணிகண்டன் (25). இவா் பழனி-உடுமலை சாலையில் சண்முகநதி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே வந்த அரசு நகரப் பேருந்து மோதியதில் மணிகண்டன் பலத்த காயமடைந்தாா். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.