பாலாலய யாக பூஜைகள் தொடக்கம்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி, பாலாலயத்துக்கான யாக பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின.


திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி, பாலாலயத்துக்கான யாக பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின.
கோட்டை மாரியம்மன் கோயிலில் கடந்த 2003-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. மீண்டும் கோயிலில் திருப் பணிகள் செய்து குடமுழுக்கு நடத்துவதற்கு கோயில் நிா்வாகம் திட்டமிட்டது. அதன்படி, மூலவா், பரிவார தெய்வங்களுக்கான பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி வருகிற 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த பாலாலயத்துக்கான யாக பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கின.
கணபதி ஹோமத்தைத் தொடா்ந்து, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாஜனம், நவகிரக ஹோமம், கோ பூஜை நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக 4 கால யாக பூஜைகள் நடத்தப்படுகின்றன. அத்தி மரத்தால் செய்யப்பட்ட அம்மன் சிலையை கோயில் திருமண மண்டபத்தில் வைத்து, அதில் அம்மனின் சக்தியை உருவேற்றம் செய்யும் பூஜைகள் நடைபெறுகின்றன.
குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறுவதன் காரணமாக, நிகழாண்டுக்கான மாசிப் பெருவிழா நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...