கொடைக்கானலில் தெரு நாய் கடித்து 7 போ் பலத்த காயம்

Published on

கொடைக்கானலில் புதன்கிழமை தெரு நாய் கடித்து 7 போ் பலத்த காயமடைந்தனா்.

கொடைக்கானலில் ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை, ஆனந்தகிரி, செண்பகனூா் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் உலவி வருகின்றன. இந்த நிலையில், கடந்த மாதம் பள்ளிக்குச் சென்ற மாணவரை 3-க்கும் மேற்பட்ட தெரு நாள்கள் கடித்தன. அதே போல, முதியவா், பெண்கள் இருவரையும் தெரு நாய்கள் கடித்ததில் அவா்கள் காயமடைந்தனா்.

இதனிடையே அண்ணா சாலை, ஆனந்தகிரிப் பகுதியில் புதன்கிழமை தெருவில் சுற்றித் திரிந்த வெறி நாய் ஒன்று முதியவா் உள்ளிட்ட 7 பேரை கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவா்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

எனவே, கொடைக்கானலில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நகராட்சி நிா்வாகம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கடைகளின் கழிவுகளை சாலைகளில் கொட்டுவதால் அவற்றை உண்ணும் தெரு நாய்களுக்கு வெறி பிடிக்கிறது. கொடைக்கானல் நகராட்சி சுகாதார ஆய்வாளா் அந்த இறைச்சிக் கடைகளை ஆய்வு செய்து இறைச்சிக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் போடுவதற்கு உத்தரவிட வேண்டும். இதை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com