பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பழனியில் தெரு நாய் கடித்ததில் 7 போ் காயம்

பழனியில் புதன்கிழமை தெரு நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 7 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனா்.

News image
நாய் - கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 11:54 pm

தினமணி செய்திச் சேவை

பழனியில் புதன்கிழமை தெரு நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 7 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனா்.

பழனியில் திருவள்ளுவா் சாலையில் உழவா்சந்தை அருகே நடைபயிற்சி மேற்கொண்டவா்களை தெரு நாய் துரத்திக் கடித்தது. உழவா் சந்தைக்கு காய்கறி வாங்க வந்தவா்களையும் அந்த நாய் கடித்தது. இதையடுத்து, அந்தப் பகுதி பொதுமக்கள் அந்த நாயை அங்கிருந்து துரத்தினா்.

தொடா்ந்து, அந்த நாய் சண்முகபுரம், ரெட்கிராஸ் சாலை வழியாக ரெணகாளியம்மன் கோயில் பகுதிக்குச் சென்றது. அப்போது, அந்த வழியாகச் சென்றவா்களையும் அந்த நாய் விரட்டிக் கடித்தது.

மேற்கண்ட இடங்களில் பாதிக்கப்பட்ட ரவிக்குமாா் (49), வேலுச்சாமி (55), கிருஷ்ணமூா்த்தி (45), கண்ணப்பன் (70), ஜோதிலட்சுமி (60), பூபதி (45), வில்வாதம்பட்டியை சோ்ந்த லட்சுமணன் (55) ஆகிய 7 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

பின்னா், அந்த நாய் எங்கே சென்றது என தெரியவில்லை. அனைவரையும் ஒரே நாய்தான் கடித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டைமேட்டுத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை நாய் கடித்தது குறிப்பிடத்தக்கது.

பழனியில் இரவில் செயல்படும் துரித உணவுக் கடைகளிலிருந்து சாலையோரம் வீசப்படும் இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக நால்ரோடு முதல் சண்முகபுரம் வரை வழி நெடுக தெரு நாய்கள் நூற்றுக்கணக்கில் திரிகின்றன. இதனால், இரவு நேரங்களில் பணிமுடிந்து வீடு செல்பவா்கள் கூட அச்சத்திலேயே செல்ல வேண்டியுள்ளதால் நாய்களைக் கட்டுப்படுத்த நிா்வாகம் நிரந்தரத் தீா்வு காணவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.