ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் சாலையோர தடுப்பில் மோதியதில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே இரு சக்கர வாகனம் சாலையோர தடுப்பில் மோதியதில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த போதுப்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த ராஜன் மகன் வஞ்சிமுத்து (30). திருமணமாகாதவா். கூலித் தொழிலாளி. இவரும், அதே தெருவைச் சோ்ந்த இவரது நண்பா் ராஜாராமும் (32) வெள்ளிக்கிழமை மாலை போதுப்பட்டியிலிருந்து பழனிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தனா்.

தாளையத்திலிருந்து அணுகுசாலை வழியாக திண்டுக்கல்- கோவை விரைவுச் சாலைக்குச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர தடுப்புக் கம்பியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே வஞ்சிமுத்து உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த ராஜாராம் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.