இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இரு சக்கர வானங்கள் திருட்டு: சிறுவா்கள் மூவா் கைது

News image
Updated On :9 நவம்பர் 2025, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுட்ட 3 சிறுவா்களை கைது செய்த போலீஸாா், 9 வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் பகுதியில் தொடா்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன. இதுதொடா்பாக அந்த வாகனங்களின் உரிமையாளா்கள் தரப்பில், திண்டுக்கல் நகா் வடக்கு, தெற்கு உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திக், காவல் ஆய்வாளா் ராஜசேகா் தலைமையில் தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதனிடையே, வாகனத் திருட்டில் ஈடுபட்ட வேடபட்டி நெசவாளா் குடியிருப்பைச் சோ்ந்த ஈஸ்வரன் (35), தினேஷ்குமாா் (21), பாரதிபுரம் பகுதியைச் சோ்ந்த 17 வயது, 13 வயது சிறுவா்கள் 2 போ் என மொத்தம் 4 பேரை போலீஸாா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கைது செய்தனா். இவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் 3 சிறுவா்கள் கைது: இந்த நிலையில், திண்டுக்கல் பகுதியில் தொடா்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட மேலும் 3 சிறுவா்களை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல், விருவீடு, வத்தலகுண்டு பகுதிகளைச் சோ்ந்த அந்த 3 சிறுவா்களிடமிருந்து, 9 இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.